‘யோகி’ பாபுவின் ‘ஜாம்பி’ புதிய தகவல்கள்!

ECR சாலையில் அமைந்துள்ள ரிசார்ட்களில் படமாகி வரும் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’

செய்திகள் 11-Mar-2019 2:52 PM IST VRC கருத்துக்கள்

‘யோகி’ பாபு கதையின் நாயகனாக நடிக்கும் காமெடி படம் ‘ஜாம்பி’. புவன் நலன் இயக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து விடுமாம்.

தற்போது யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ராமர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்டோர் பங்குபெறும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகளும் ரிசார்ட்டில் இரவு நேரங்களில் நடப்பது மாதிரி இருப்பதால் சென்னை அருகே உள்ள வி.ஜி.பி.போன்ற ரிசார்ட்களில் இப்படத்தின் காட்சிகள் படமாகி வருகிறது. சமீபத்தில் வி.ஜி.பி.ரிசார்ட்டில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர் ஆகியோருடன் 200 இளம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட காட்சி படமாகியுள்ளது. இந்த படத்தின் கதை சென்னை முதல் பாண்டிச்சேரி வரை ECR சாலையில் பயணிப்பது மாதிரியும் ஒரு நாள் இரவில் நடப்பது மாதிரியும் அமைக்கப்பட்டுள்ளதாம்!

‘எஸ் 3 பிக்சர்ஸ்’ சார்பில் வசந்த் மாணிக்கம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரேம்ஜி இசை அமைக்கிறார். இந்த படத்தை சம்மர் ட்ரீட்டாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

#YogiBabu #YashikaAannand #PremgiAmaren #Zombie #BhuvanNullan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூர்கா ட்ரைலர்


;