‘K13’ல் இணைந்த ‘AAA’ பிரபலம்!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடந்து ‘K13’ படத்திலும் நடிக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!

செய்திகள் 11-Mar-2019 3:19 PM IST VRC கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிகராக இணைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடிக்கும் ‘K13’ படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். பரத் நீலகண்டன் இயக்கும் இந்த படத்தில் காயத்ரியும் நடிக்க இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை சமீபத்தில் படமாக்கியுள்ளார் இயக்குனர் பரத் நீலகண்டன். எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.

#Arulnithi #ShraddhaSrinath #YogiBabu #SamCS #K13 #AdhikRavichandran


.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூர்கா டீஸர்


;