சூர்யா, தனுஷ் வெளியிட்ட அமிதாப்பச்சன் பட லோகோ!

அமிதாப்பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பிரம்மாஸ்த்ரா’ படத்தின் தமிழ் லோகோவை சூர்யா, தனுஷ் வெளியிட்டனர்!

செய்திகள் 11-Mar-2019 4:25 PM IST VRC கருத்துக்கள்

அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபீர், அலியா பட், மௌனி ராய், நாகார்ஜுனா ஆகியோர் நடிக்கும் படம் ‘பிரம்மாஸ்த்ரா’. பிரம்மாண்டாமக் உருவாகும் இப்படத்தின் லோகோ சிவராத்திரியை முன்னிட்டு கடந்த மார்ச் 4-ஆம் தேதி கும்ப மேளாவில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ‘பிரம்மாஸ்த்ரா’ திரைப்படத்தின் லோகோ தமிழில் வெளியானது. தமிழ் ‘பிரம்மாஸ்த்ரா’ லோகோவை நடிகர்கள் சூர்யாவும், தனுஷும் இணைந்து வெளியிட்டனர். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள லோகோவை ‘பாகுபலி’ படப் புகழ் இயக்குனர் ராஜமௌலியும், நடிகர் ராணாவும் இணைந்து வெளியிட்டனர். ‘பிரம்மாஸ்த்ரா’ படம் மூன்று பாகங்களை கொண்டது. இதன் முதல் பாகம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. ‘பிரம்மாஸ்த்ரா’ ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஷமிதாப்’ ஹிந்தி பட டிரைலர்


;