ஜீவாவின் ‘கீ’ முக்கிய அதிகாரபூர்வ தகவல்!

ஜீவா, நிக்கி கல்ராணி நடிக்கும்  ‘கீ’ ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 13-Mar-2019 1:04 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் ‘கீ’. இந்த படத்தை ‘குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ராணி கதையின் நாயகியாக நடிக்க மற்றும் இப்படத்தில் அனைகா சோடி, ராஜேந்திரபிரசாத், கோவிந்த் பத்மசூர்யா, சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின அனைத்து வேலைகளும் முடிவடைந்து சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட்டும் கிடைத்த இப்படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்து படக்குழுவினர் சில ரிலீஸ் தேதிகளும் குறித்தார்கள். ஆனால் ‘கீ’ குறித்த அந்த தேதிகளில் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது ‘கீ’ படத்தை ஏப்ரல் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இப்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாக, அதனை தொடர்ந்து ஜீவா நடித்து வரும் ‘ஜிப்ஸி’, ‘கொரில்லா’ ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது!

#Kee #Jiiva #GovindPadmasoorya #NikkiGalrani #AnaikaSoti #RJBalaji #RajendraPrasad

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;