‘ஹீரோ’ படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கும் எழுத்தாளர்!

‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’ எழுத்தாளர் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஹீரோ’

செய்திகள் 13-Mar-2019 4:32 PM IST VRC கருத்துக்கள்

மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதியவர் ஆனந்த் அண்ணாமலை. ‘குற்றம் தண்டனை’ படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதையையும் எழுதிய ஆனந்த் அண்ணாமலை சில நாவல்களையும் எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகிறார். இந்த படம் நேரடி தமிழ் படமாக உருவாக இருக்கிறது என்றும், இப்படம் எல்லா தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த படம் விளையாட்டு த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22-ஆம் தேதி புது தில்லியில் துவங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் கதையின் நாயகியாக ‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘காலா’, ‘கபாலி’ படப்புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிரார். இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

தேவரகொண்டா நடிக்கும் இந்த படத்திற்கு ‘ஹீரோ’ என்று டைட்டில் வைத்திருக்கும் நிலையில் ‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் ‘HERO’ என்று டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது! இதனால் ஒரே நேரத்தில் ‘ஹீரோ’ என்ற டைட்டிலுடன் இரண்டு படங்கள் உருவாகி வருகிறது!
#Hero #VijayDevarkonda #AnandAnnamalai #Manikandan #KaakaMuttai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆண்டவன் கட்டளை - டிரைலர்


;