காதலர் தினத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்!

‘கடலை போடா பொண்ணு வேணும்’ படம் எப்படிப்பட்ட படம் என இயக்குனர் விளக்கம்

செய்திகள் 18-Mar-2019 2:12 PM IST Chandru கருத்துக்கள்

சில வாரங்களுக்கு முன் ‘------- போட பொண்ணு வேணும்’ என ஏடாகூடா சுவரொட்டி ஒன்று சென்னை சிட்டி முழுக்க வியாபித்திருந்தது. இரண்டு நாட்கள் கழித்து அது, ‘கடலை போட பொண்ணு வேணும்’ என்ற திரைப்படத்தின் விளம்பரம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அப்படம் எப்படிப்பட்ட படம் என்பதை படத்தின் இயக்குனர் ஆனந்தராஜன்.

“காதலின் அடிப்படையே கடலைப் போட்டு கல்யாணம் செய்வதுதான் என்பதே கதையின் மையம். காதல் என்பதே புரிதல் தான், இதை தான் கடலை என்று விவரிக்கிறோம். என்னுடைய கதாநாயகன் காதலியை கண்டறிந்தாரா? கடலை போட்டாரா? கல்யாணம் செய்தாரா என்பது மீதி கதை. ஜனரஞ்சகமும் சுவாரஸ்யமும் கலந்த படம். குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய படம் என்றால் அது மிகையாகாது. கதையின் இரண்டாவது பாகம் முழுவதும் ‘காதலர் தினம்‘ அன்று நடந்த சம்பவங்களை மையமாக கொண்டது.
மக்கள் முகம் சுளிக்கும் விதமான எந்த காட்சிகளும் இதில் இடம்பெறவில்லை. காதலித்து கல்யாணம் செய்வதை இலக்காக கொண்ட கதாநாயகனாக அசார் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். யோகிபாபு வரும் காட்சிகள் திரையரங்கை சிரிப்பால் நிறைய வைப்பது உறுதி. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ஆனந்தராஜன்.

மேலும் இப்படத்தில் செந்தில், மன்சூர் அலிகான், ‘லொல்லுசபா’ மனோகர் மற்றும் சுவாமிநாதன், ‘ஃபைட்டர்’ தீனா, ‘பிக்பாஸ்’ காஜல் போன்ற பல நகைச்சுவை நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். படத்திற்கு இனியன் ஒளிப்பதிவு செய்ய, ஜுபின் இசையமைக்க, சந்துரு இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார், பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.
#KadalaPodaPonnuVenum #Aanantharajan #Azhar #Monisha #Kajal # YogiBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

90ML - ட்ரைலர்


;