சிவகார்த்திகேயனின் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 2வது படத்திற்கு தலைப்பு அறிவிப்பு

செய்திகள் 18-Mar-2019 7:13 PM IST VRC கருத்துக்கள்

‘கனா’ மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் தனது 2வது படத்திற்காக ‘பிளாக் ஷீப்’ யு ட்யூப் சேனல் பிரபலங்களுடன் கூட்டணி அமைத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பும் ஆரம்பமானது. கார்த்திக் வேணுகோபால் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில் விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரியோ கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது டப்பிங் பணிகளில் மும்முரமாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என டைட்டில் வைத்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினை வித்தியாசமான முறையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ டிரைலர் பாணியில் உருவாக்கி வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஷபிர் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடல்களை ஆர்.ஜே. விக்னேஷ் எழுதியுள்ளார். யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.
#SK #SivaKarthikeyan #KarthikVenugopal #NenjamunduNermaiyunduOduRaja #RJVignesh #NNOR #Rio

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - ட்ரைலர்


;