சிவகார்த்திகேயன், ஆரவ் படங்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்ட ராதிகா!

‘மிஸ்டர் லோக்கல்’ பட டப்பிங் வேலையை முடித்த ராதிகா இப்போது ஆர்வுடன் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் நடித்து வருகிறார்!

செய்திகள் 20-Mar-2019 1:43 PM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காமெடி கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது. இந்த படம் மே 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வர, இப்படத்திற்கான தனது டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாக ராதிகா ட்வீட் செய்துள்ளார். ராதிகா ட்வீட் செய்திருப்பதில், ‘‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்தது. இயக்குனர் ராஜேஷுக்கு நன்றி! சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோருடனான வெற்றிப் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’’ என்று அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் ராதிகா தான் நடித்து வரும் மற்றொரு படம் குறித்தும் ட்வீட் செய்துள்ளார். பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண் இப்போது இயக்கி வரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இந்த படத்தில் ஆரவ் மார்க்கெட் தாதாவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, படப்பிடிப்புதளத்தில் ராதிகா ஆர்வுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சரண் இயக்கத்தில் ஆர்வுடன் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் தானும் நடிப்பது குறித்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

#Radikaa #MrLocal #MarketRajMBBS #SK #SivaKarthikeyan #Arav #Nayanthara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;