‘SK-17’ல் இணையும் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 21-Mar-2019 11:35 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது! எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், இப்போது ‘நேற்று இன்று நாளை’ ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் குறித்த அதிகாரரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இது சிவகார்த்திகேயனின் 17-ஆவது படமாகும். இந்த படத்தை சுபாஷ்கரனின் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க, இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தி படப்பிடிப்பு வேலைகள் வரும் ஜூலை மாதம் துவங்கி படம் 2020-ல் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் சிவனும், சிவகார்த்திகேயனும் முதன் முதலாக இணையும் இந்த படத்திற்கு ‘LIC’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு தகவலும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. ஆக, இப்போது சிவகார்த்திகேயன் கைவசம் ஐந்து படங்கள் இருக்கின்றன!

#SK17 #SivaKarthikeyan #VigneshShivan #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கே 13 டீஸர்


;