முதல்கட்ட படபிடிப்பை முடித்த விஜய் சேதுபதி!

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 23-Mar-2019 1:11 PM IST Top 10 கருத்துக்கள்

விக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். பிரபல ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில விஜய்சேதுபதியுடன் ராஷிகண்ணா கதாநாயகியாக நடிக்க, மற்ற முக்கிய கேரக்டர்களில் நாசர், சூரி, அஷுதோஷ் ராணா, ரவிகிஷன், ‘மொட்டை’ ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்க்ள். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் துவங்கியது. இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இன்னும் பெயரிடைப்படாத இந்த படத்திற்கு விவேக், மெர்வின் ஆகியோர் இசை அமைக்கிறார்கள். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். எம்.பிரபாகரன் கலை இயக்கத்தை கவனித்து வருகிறார்.

#VijaySethupathi #Raashikhanna #MakkalSelvan #VijayChandar #Soori

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;