‘கீ’ படத்தை ஏன் பாரக்கணும்? - இயக்குனர் காளீஸ் விளக்கம்!

ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘கீ’ படம் குறித்து இயக்குனர் காளீஸ் கூறியவை…

செய்திகள் 25-Mar-2019 12:26 PM IST Top 10 கருத்துக்கள்

செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கீ’. இந்த படத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கேரளாவை சேர்ந்த கோவிந்த் பத்மசூர்யா வில்லனாக நடித்து அறிமுகமாகிறார். பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு நடந்த இப்படத்தின் படத்திரிகையாளர் சந்திப்பில் இப்படம் குறித்து இயக்குனர் காளீஸ் பேசும்போது,

‘கீ’ என்ற தலைப்புக்கு என்ன பொருள் என்றால் ‘கீ’ நமக்கு எவ்வளவு நன்மைகள் தருகிறதோ அவ்வளவு அளவு தீமைகளும் தருகிறது. அதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு ‘கீ’யை அழுத்தும்போது அது உங்களுக்கு எவ்வளவு நன்மைகள் தருகிறதோ, அவ்வளவு தீமைகளும் அதன் மூலம் வர வாய்ப்பிருக்கிரது. அதைச் சொல்லும் படம் தான் இது. இந்த படத்தை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? உங்கள் கையில் ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் நீங்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். உங்கள் மகனிடம், மகளிம், இல்லை உங்கள் தாத்தாவிடம் என யார் யாரிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறதோ அத்தனை பேரும் இந்த படத்தை பார்க்கணும். இப்படி ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்களுக்கான படம் தான் இந்த ‘கீ’.

ஒரு ஸ்மார்ட் ஃபோன் மூலம் நீங்கள் ஒரு ஃபோட்டோவுக்கு கொடுக்கிற ஒரு லைக், இல்லை ஷேர் எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது என்றும் அதற்கு பின்னாடி இருக்கும் ஆபத்துக்களையும் சொல்லும் படம் இது. இன்று சமூக வலைதளங்கள் எவ்வளவு நமக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே நேரம் அதனை பயன்படுத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் இப்படம் வலியுறுத்தும்.

இந்த படத்தில் ஜீவா ஜாலியான ஒரு இளைஞராக நடிக்கிறார். அதே நேரம் மிகவும் திறமையான ஒரு ஹேக்கர் அவர். ஜீவாவின் கேரக்டரைப் போலவே வில்லனாக வரும் கோவிந்த் பத்மசூர்யாவின் கேரக்டரும் பலம் வாய்ந்தது. இன்றைய புதிய தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து வைத்து வில்லத்தனங்கள் செய்யும் கோவிந்த் பத்மசூர்யாவுக்கும் ஜீவாவுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டங்கள்தான் ‘கீ’.

இந்த படமும், சமீபத்தில் வெளியான ‘இரும்புத்திரை’யும் ஒரே ஜானர் படம் என்ற ஒரு பேச்சு இருந்து வருகிறது. ‘இரும்புத்திரை’ ஏ.டி.எம்.கார்ட், வங்கி கணக்கில் இருக்கிற பணத்தை எப்படி திருடுகிறது என்பதை சொல்லும் படம்! ஆனால் இது முழுக்க முழுக்க மாறுபட்ட கதைக்களத்தை கொண்ட படமாகும். ‘கீ’ படத்தை பார்த்து வெளியில் வருகிறவர்கள் இனி ஒரு ஃபோட்டோவுக்கு லைக் கொடுக்கவோ, ஷேர் பண்ணவோ யோசிப்பார்கள்’’ என்றார்.

விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜம் கவனித்துள்ளார்.

#Kee #Jiiva #GovindPadmasoorya #NikkiGalrani #AnaikaSoti #RJBalaji #RajendraPrasa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;