அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ புதிய அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!

வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 25-Mar-2019 4:10 PM IST VRC கருத்துக்கள்

‘தீரன் அதிகராம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பாரவை’. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படம் முதலில் மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மே-1 ஆம் தேதி அஜித் பிறந்த நாள் என்பதால் இப்படம் மே-1-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதே நேரம் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகவும் வாய்ப்புண்டு என்றும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியானது. ‘விஸ்வாசம்’ படத்திற்கு முன் அஜித் நடிப்பில் வெளியாகிய ‘விவேகம்’ 2017, ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி வெளியானது. இப்போது ‘விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’யும் ஆக்ஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

# NerkondaPaarvai #Ajith #VidyaBalan #ShraddhaSrinath #HVinoth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;