ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் படத்தின் புதிய தகவல்!

சசி இயக்கும்  ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது!

செய்திகள் 25-Mar-2019 6:23 PM IST VRC கருத்துக்கள்

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி இயக்கும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், சித்தார்த், மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார்கள். அக்காள் - தம்பி உறவை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் அக்காவாக லிஜோ மோள் நடிக்க, தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். சித்தார்த் டிராஃபிக் போலீஸ் அதிகாரியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் பைக் ரேசராக நடிக்கிறார். கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துவிட்டது என்பதை ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் ட்வீட் செய்துள்ளனர். பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்த ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுகம் சித்துகுமார் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனிக்கிறார்.

#GVPrakashKumar #Siddharth #SivappuManjalPachai #Sasi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;