அதர்வாவின் ‘100’ முக்கிய அதிகாரபூர்வ தகவல்!

அதர்வா, ஹன்சிகா நடிக்கும் ‘100’ மே 3-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 27-Mar-2019 12:27 PM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் ‘100’. ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, ஹன்சிகாவுடன் ‘எருமை சாணி’ புகழ் ஹரிதா, மற்றும் ‘யோகி’ பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தை மே மாதம் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்துள்ளனர். அதர்வாவும் ஹன்சிகாவும் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘பூமராங்’ படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளியாகும் படம் இது!

#Atharvaa #100 #SamAnton #AuraaCinemas #SamCS #HansikaMotwani #Hansika #YogiBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூர்கா ட்ரைலர்


;