ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் பட அப்டேட்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ஆம் தேதி மும்பையில் துவங்குகிறது!

செய்திகள் 27-Mar-2019 12:38 PM IST VRC கருத்துக்கள்

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்! இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும், மம்முட்டியும் இணைந்து நடித்த ‘தளபதி’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகள் கடந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் மூலம் மீண்டும் ரஜினி நடிக்கும் டத்தில் பணிபுரிகிறார் சந்தோஷ் சிவன்! இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’, ரஜினி நடித்த ‘பேட்ட’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸும், ரஜினியும் முதன் முதலாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விரைவில் துவங்க இருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ஆம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது என்றும், அங்கு தொடர்ந்து சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்றும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. பெரும்பாலும் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் ரஜினி சென்னையில் இருப்பதில்லை! அந்த வகையில் இந்த தேர்தல் நேரத்திலும் ரஜினி சென்னையில் இருப்பதை தவிர்த்து தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

#ARMurugadoss #Rajini #Anirudh #Nayanthara #Thalivar #Petta

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;