சேரனின் ‘திருமணம்’ மறுவெளியீடு!

இந்த மாதம் 1-ஆம் தேதி ரிலீசான சேரனின் ‘திருமணம்’ மறுவெளியீடாக ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 30-Mar-2019 3:20 PM IST Top 10 கருத்துக்கள்

இந்த (மார்ச்) மாதம் 1-ஆம் தேதி வெளியான படம் ‘திருமணம்’. சேரன் இயக்கி நடித்த இந்த படத்தில் கதாநாயகனாக உமாபதி நடிக்க, கதாநாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மறு வெளியீடாக ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்து இப்படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

‘‘குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமென்ட் என நல்ல கதை களத்துடன் வெளியாகிய இப்படத்திற்கு, அருமையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் இப்படத்திற்கு வர முடியாத சூழ்நிலை உருவாகியது. அதே நேரம் இப்படத்தை திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காததல் பல இடங்களில் இப்படத்தை திரையிட முடியவில்லை. இப்போது பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும் இத்திரைப்படத்தை வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி 75 திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் சேரனின் ‘திருமணம்’ படத்தை ரசிகர்கள் மீண்டும் திரையில் பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

#Cheran #Thirumanam #UmapathyRamaia #KavyaSuresh #ThambiRamaiah

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பில்லா பாண்டி ட்ரைலர்


;