மறைந்த இயக்குனர் மகேந்திரன் குறித்து ரஜினி, கமல், விஜய்சேதுபதி….

மறைந்த இயக்குனர் மகேந்திரனுக்கு ரஜினி, கமல். மணிரத்னம், பாரதிராஜா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்!

கட்டுரை 3-Apr-2019 10:42 AM IST Top 10 கருத்துக்கள்

மறைந்த இயக்குனர் மகேந்திரன் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், விஜய்சேதுபதி இயக்குனர்கள் மணிரத்னம், பாரதிராஜா, கார்த்திக் சுப்புராஜ், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, ரேவதி, அர்ச்சனா, இசை அமைப்பாளர் இளையராஜா உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். திரையுலகத்தை சேர்ந்த பலர் சமூகவலைதளங்கள் மூலமாகவும் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக பதிவிட்டுள்ளனர்.

இயக்குனர் மகேந்திரன் மறைவு குறித்து ரஜினிகாந்த் பேசும்போதும், ‘‘என்னுடைய நெருங்கிய நண்பர் மகேந்திரன். சினிமாவையும் தாண்டி எங்களுக்குள் ஒரு ஆழமான நட்பு இருந்தது. தற்போதுள்ள சினிமா, அரசியல் சமூகம் மீது அவர் அதிருப்தியில் இருந்தார். வாழ்வில் எந்த சூழலிலும் தனது சுய மரியாதையை விடுக்கொடுத்ததில்லை மகேந்திரன். எனக்குள் மற்றொரு ரஜினிகாந்த் இருப்பதை காட்டியவர் மகேந்திரன் தான். எனக்கு நடிப்பில் புது பரிமாணத்தை சொல்லி கொடுத்த்வர்! சினிமா இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மகேந்திரன் குறித்து பேசும்போது, ‘‘நான் பார்த்து வியந்த திறமையானவர்களில் ஒருவர் மகேந்திரன். எனது ஊருக்கு பக்கத்து ஊர்காரர். அதனால் எனக்கு இன்னும் அவருடன் நெருக்கம் அதிகம். ‘முள்ளும் மலரும்’ படத்தில் நான்தான் முதலில் நடிக்க வேண்டியது. நான் மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோரை கை கோர்க்க வைத்து நிறைய வெற்றிப் படங்களை எடுங்கள் என்று அப்போது வாழ்த்தினேன். ‘முள்ளும் மலரும்’ படத்தில் கிட்டத்தட்ட ஒரு புரொடக்‌ஷன் மேனேஜர் அளவுக்கு நானும் வேலை பார்த்திருக்கிறேன். அது இப்போதும் என் மந்தில் பசுமையாக இருக்கிறது. மகேந்திரனை பார்த்துதான் நிறைய இளைஞர்கள் சினிமா எடுக்க விரும்பி வந்தனர். அவர் இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும். சாதனைகள புரிந்திருக்க வேண்டும். இது தான் அவர் குறித்து என் மனதுக்குள் இருக்கும் ஆதங்கம்! மகேந்திரன் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

இயக்குனர் சசிக்குமார், ‘‘தமிழ் சினிமாவை உலக சினிமாவாக வளர்த்தெடுத்த ஆளுமை மகேந்திரன் ஐயா! மறைந்தாலும் தன் கலைப்படைப்புகள் வழி நம்மோடு கலந்திருக்கிறார் மகேந்திரன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இயக்குனர்ன் மகேந்திரன் எளிமைதான் உங்கள் இலக்கு! திரை விமர்சனம் எழுதியது மட்டும் இல்லாமல் எது கலைத்தன்மையோடு வெகுஜன மக்களை கவர்ந்திழுக்கும் சினிமா என்று ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ போன்ற படங்களை எடுத்து காட்டிய அதிசயம் நீங்கள்! ஐயா உங்கள் படைப்புகள் எப்போதும் வாழும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி பேசும்போது, ‘‘நான் இந்த வீட்டுக்கு இரண்டு மூன்று முறை வந்திருக்கிறேன். நான் பார்த்து நிறைய கற்றுக்கொண்ட படம் அவர் இயக்கிய ‘முள்ளும் மலரும்’. அவரோட மிகப் பெரிய ரசிகன் நான்! நான் அடிக்கடி அவர்கிட்ட எனக்காக ஒரு படத்தை இயக்குங்கள் என்று கேட்டுக்கோண்டே இருந்தேன். ஆனால் இப்படி ஆயிட்டதே! கஷ்டமாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து, ‘தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் மகேந்திரன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் தரணீதரன் இயக்குனர் மகேந்திரன் மறைவு குறித்து பேசும்போது ‘‘‘நான் இயக்கிய ‘சீதக்காதி’யில் மகேந்திரன் அவர்கள் நடித்தது எனது பாக்கியம்’’ என்று கூறியுள்ளார்.

இயக்குனர் வசந்த் கூறும்போது, ‘எனது மானசீக குருக்களில் இயக்குனர் மகேந்திரனும் ஒருவர். அவர் சிறந்த இயக்குனர் மட்டும் இல்லை, சிறந்த மனிதரும் கூட’’ என்று கூறியுள்ளார்.

#Kamal #Rajini #VijaySethupathi #Mahendran #ManiRatnam#BharathiRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;