வசந்தபாலனின் அடுத்த பட ஹீரோ?

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, வசந்தபாலன் இயக்கத்தில்  விஷ்ணுவிஷால் நடிக்கும் படம்!

செய்திகள் 9-Apr-2019 12:00 PM IST Top 10 கருத்துக்கள்

‘வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் இப்போது இயக்கி வரும் படம் ‘ஜெயில்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, இவருடன் ராதிகா சரத்குமார், ‘யோகி’ பாபு, ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, அரவிந்த் ஆகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் அனைத்து படபிடிப்பு வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தனது அடுத்த பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். வசந்தபாலன் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது! . இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிரபார்க்கப்படுகிறாது. விஷ்ணு விஷால் இப்போது எழில் இயக்கும் ‘ஜெகஜ்ஜால கில்லாடி’ படத்தில் நடித்து வருகிறார். .

#VasanthaBalan #VishnuVishal #GVP #GVPrakashKumar #Jail

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குப்பத்து ராஜா ட்ரைலர்


;