விஜய் ஆண்டனி பட இயக்குனருடன் இணைந்த சசிக்குமார்!

‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் சசிக்குமார் நடிக்கும் படம்!

செய்திகள் 10-Apr-2019 11:11 AM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடித்த சசிக்குமார் இப்போது ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘நாடோடிகள்-2’, சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் சசிக்குமார் அடுத்து விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் ரக படமாக உருவாகிறது. இந்த படத்தில் சசிக்குமாருடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

#Sasikumar #Salim # NirmalKumar #Rajinikanth #Petta #Naadodigal2 #KennedyClub
#KombuVachaSingamda

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;