அருள்நிதியை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்!

விஜய்சேதுபதி, விஷ்ணுவிஷால், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தொடர்ந்து அருள்நிதியை இயக்கும் சீனுராமசாமி

செய்திகள் 10-Apr-2019 11:23 AM IST VRC கருத்துக்கள்

அருள்நிதி இப்போது பரத்நீலகண்டன் இயக்கத்தில் ‘K-13’, ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து அருள்நிதி விஜய்சேதுபதி, விஷ்ணுவிஷால், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நடிக்க வைத்து படங்களை இயக்கிய சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சீனுராமசாமி விஜய்சேதுபதி நடிப்பில் ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துடன் அருள்நிதி நடிக்கும் படத்தையும் இயக்குகிறார் சீனுராமசாமி! அருள்நிதியும் சீனுராமசாமியும் முதன் முதலாக இணையும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘டைம்லைன் சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கிறார். இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.

#Arulnithi #SeenuRamasamy #YuvanshankarRaja #VijaySethupathi #VishnuVishak

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;