‘சகலகலாவல்லி’ ஆண்ட்ரியா- விஜய்ஆண்டனி புகழாரம்!

தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ‘மாளிகை’

செய்திகள் 10-Apr-2019 1:25 PM IST Top 10 கருத்துக்கள்

மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரி, மற்றுமொரு மாறுபட்ட கேரக்டர் என்று இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ‘மாளிகை’. இந்த படத்தை ‘சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்’ சார்பாக மும்பையை சேர்ந்த கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை கன்னட சினிமாவை சேர்ந்த தில் சத்யா எழுதி இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தில் நடித்திருக்கும் ஆண்ட்ரியா, கே.எஸ்.ரவிக்குமார், தெலுங்கு நடிகர் ஆலி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக விஜய் ஆண்டனியும் கலந்துகொண்டார்.

விழாஇல் படம் குறித்து இயக்குனர் தில் சத்யா பேசியதாவது, ‘‘தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, (கன்னட நடிகர் கார்த்திக்) இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, "இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு ஹிந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்தது மாறுபட்ட அனுபவம்! இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசுகையில்,

‘‘இந்த படத்தின் கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதாக கேள்விப்பட்டேன். அதனால் இந்தப்படம் நிச்சயம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப் படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்றார்.

#Andrea #VijayAntony #KamalBohra #DilSathya #RajeshKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாளிகை டீஸர்


;