மலையாள படப்பிடிப்புக்காக கொச்சி சென்ற விஜய்சேதுபதி!

‘மார்க்கோணி மத்தாயி’ மலையாள  படத்தின் படப்பிடிப்புக்காக கொச்சி சென்ற விஜய்சேதுபதி!

செய்திகள் 13-Apr-2019 10:54 AM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு மொழி படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி மலையாள மொழி படம் ஒன்றிலும் நடிக்கிறார் என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ‘மார்கோணி மத்தாயி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க. இவரது கேரக்டருக்கு இணையான ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சனில் களத்தில் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் சேதுபதி கொச்சி சென்றுள்ளார். அங்கு நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்றுமுதல் விஜய்சேதுபதி கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயராம், விஜய்சேதுபதியுடன் ஆத்மியா கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் அஜு வர்கீஸ், சித்தார்த் சிவா, சுதீர் கரமனா உட்பட பல மலையாள நடிகர்கள் நடிக்கும் இந்த படம் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் மலையாள படமாகும். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதுபோல் விஜய்சேதுபதிக்கும் கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;