சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

‘இறுதிசுற்று’ சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம்  ‘சூரரைப் போற்று’

செய்திகள் 13-Apr-2019 4:37 PM IST VRC கருத்துக்கள்

‘இறுதிசுற்று’ படப் புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா-38’ படத்தின் படப்பிடிப்பு சென்ற 7-ஆம் தேதி பூஜையுடன் துவங்கியது. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற குணீத் மோங்காவின் ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் சற்றுமுன் வெளியிடப்பட்டது. சூர்யாவின் 38-வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘சூரரைப் போற்று’ என்று வித்தியாசமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் மற்றும் பல நடிகர், நடிகைகள் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘NGK’ மே 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘கப்பான்’ படத்தின் டீஸர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. சூர்யா நடிக்கும் படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருப்பதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். .

#Suriya #SooraraiPottru #SudhaKongara #Aparnabalamurali #GVPrakash

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;