ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸாகும் ‘காப்பான்’!

சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள் 15-Apr-2019 6:31 PM IST Top 10 கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ படம் மே 31ஆம் தேதி வெளியீட்டுக்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று, தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான ‘காப்பான்’ படத்தின் டீஸர் வெளியானது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் இந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. டீஸரை வெளியிட்ட கையோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் நேற்றே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். ஆகஸ்ட் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘காப்பான்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

#Suriya #NGK #Kaappaan # HarrisJayaraj #KVAnand #Sayyeshaa #Arya #Mohanlal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;