மீண்டும் ‘துப்பறிவாளன்’ கூட்டணி!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்-2’

செய்திகள் 16-Apr-2019 10:49 AM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படம் வெற்றிப் படமாக அமைந்து வசூலையும் அள்ளியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் மிஷ்கினும், விஷாலும் முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை லண்டனில் நடைபெறவிருக்கிறதாம்.

விஷால் நடிப்பில் இப்போது உருவாகி வரும் ‘அயோக்யா’ மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சுந்தர்.சி.இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் தவிர அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார் விஷால். இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்திய கதை என்று சொல்லப்படுகிறது. விஷால் நடிக்கும் புதிய படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Mysskin #Vishal #Prasanna #Vinay #AnuEmmanue #AndreaJeremiah

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;