விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ எப்போது ரிலீசாகிறது?

விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ மே  16-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 16-Apr-2019 2:57 PM IST VRC கருத்துக்கள்

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அருண்குமாரும், விஜய்சேதுபதியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சிந்துபாத்’. ‘கே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராஜராஜனும், ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேந்துபதியின் பிறந்த நாளான ஜனவரி 16-ஆம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியுடன் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை மே 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ள படக்குழுவினர் அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்துள்ளனர். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படம் . தாய்லாந்த் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இசைக்கு யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவுக்கு விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்புக்கு ரூபன் என்று பிரபலமான பல டெக்னீஷியன்கள் இப்படத்தின் பணிபுரிந்துள்ளனர்.

#VijaySethupathi #Anjali #VivekPrasanna #Sindhubaadh #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கழுகு 2 - டீஸர்


;