‘மிஸ்டர் லோக்கலு’க்காக சிவகார்த்திகேயனின் ‘கலக்கலு’ பாடல்…

‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய ‘கலக்கலு மிஸ்டர் லோக்கலு…’ பாடல்..

செய்திகள் 17-Apr-2019 11:20 AM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கும் இந்த படத்தில் இடம் பெறும் ‘டக்குனு டக்குனு…’ என்று துவங்கும் பாடல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது ‘கலக்கலு…’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். ஏற்கெனவே சில பாடல்களை பாடியுள்ள சிவகார்த்திகேயன் பாடியுள்ள இந்த ‘கலக்கலு’ பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. சீமராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ராதிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘நேற்று இன்று நாளை’ இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிக்கிறார். இந்த படங்கள் தவிர பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் என்று சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க இருக்கிறார்.



#MrLocal #SivaKarthikeyan #Nayanthara #Nayantara #HipHopThamizha #RajeshM #KalakkaluMrLocalu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;