நயன்தாராவின் ‘ஐரா’ வரிசையில் இடம் பிடித்த ‘கொலையுதிர்காலம்'

நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 17-Apr-2019 11:49 AM IST VRC கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஐரா’. இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சக்ரி டொலேட்டி இயக்கியுள்ள இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது! மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்தின் சென்சார் காட்சி நடைபெற்று முடிந்துள்ளது. சென்சாரில் இப்படத்திற்கு U/A சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய ‘ஐரா’ படத்திற்கும் சென்சாரில் இதே ‘U/A’ சர்டிஃபிக்கெட் தான் கிடைத்திருந்தது. ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தில் நயன்தாராவுடன் பூமிமா, பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, இந்த படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனித்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் சென்சார் காட்சி முடிவடைந்து விட்டதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#KolaiyuthirKaalam #KolaiyuthirKaalamCensored #Nayanthara #Nayantara #Airaa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;