கௌதம் கார்த்திக், அருள்நிதியுடன் களமிறங்கும் அதர்வா!

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா நடிக்கும் ‘100’ மே 3-ஆம் தேதி ரிலீஸாகிறது!

செய்திகள் 20-Apr-2019 11:36 AM IST VRC கருத்துக்கள்

‘பூமராங்’ படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘100’. சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வாவுடன் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சாம்.சி.எஸ்.இசை அமைக்க, கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தை மே 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவராட்டம்’, அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘K-13’ ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது அந்த வாரம் அதர்வா நடித்துள்ள ’100’ படமும் வெளியாக உள்ளது.

#Atharvaa #100TheMovie #Hansika #SamAnton #Arulnithi #Devarattam #ManjimaMohan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூர்கா ட்ரைலர்


;