‘கொலைகார’னை எப்போது ரிலீஸ் செய்யலாம்?

கொலைகாரன் படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம்? ரசிகர்களிடம் கேள்வியை வைத்த படக்குழுவினர்!

செய்திகள் 20-Apr-2019 4:21 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், நாசர், சீதா முதலானோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கொலைகாரன்’. ‘தியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் பிரதீப் தயாரித்து வரும் இந்த படத்தின் விநியோக உரிமையை தனஞ்சயனின் ‘பாஃப்டா’ நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், தனஞ்சயனும் இப்படக்குழுவினரும் இணைந்து இப்படத்தை மேலும் புரொமோட் செய்யும் வகையில் ரசிகர்களுக்கு ஒரு போட்டிய அறிவித்துள்ளனர். அது குறித்த தகவலை செய்தியாக வெளியிட்டிருக்கிறோம்.

இந்த போட்டி தவிர, ‘கொலைகாரன்’ படத்தை மே மாதம் எந்த தேதியில் ரிலீஸ் செய்யலாம் என்ற கேள்வியையும் ரசிகர்களிடம் முன் வைத்துள்ளார் இந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள ‘பாஃப்டா’ தனஞ்சயன். இதற்கு காரணம், மே மாதம் ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதில் சில படங்களுக்கான ரிலீஸ் தேதிகளும் குறிக்கப்பட்டு விட்டன! மே 1-ஆம் தேதி கௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’, அருள்நிதியின் ‘K-13’ ரிலீசாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே நேரம் அதே வாரம் மே-3-ஆம் தேதி அதர்வாவின் ‘100’ படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மே 10-ஆம் தேதி விஷாலின் ‘அயோக்யா’, மே 16,17 ஆகிய தேதிகளில் விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’, சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ மே 21-ஆம் தேதி அஞ்சலி நடிக்கும் ‘லிசா-2’, மே 31-ஆம் தேதி சூர்யாவின் ‘NGK’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட படங்கள் தவிர மே ரிலீஸ் களத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி-2’, ஜெய் நடிக்கும் ‘நீயா-2’, விமல் நடிக்கும் ‘களவாணி-2’, விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களும் உள்ளன! இப்படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இவ்வளவு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் ‘கொலைகாரன்’ படத்தை மே மாதம் எந்த தேதியில் ரிலீஸ் செய்யலாம் என்ற கேள்வியை தனஞ்சயன் ரசிகர்களிடம் வைத்துள்ளார்.

#Kolaigaran #Devi2 #Neeya2 #Kalavani2 #KadaramKondan #MrLocal #Sindhubaadh #100TheMovie #Devarattam #K13

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;