‘துருவங்கள்-16’ கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய்?

‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’ பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!

செய்திகள் 26-Apr-2019 4:36 PM IST Top 10 கருத்துக்கள்

‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இதில், அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா முலானோர் நடிக்கும் ‘நரகாசூரன்’ விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘நரகாசூரன்’ பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே கார்த்திக் நரேன் அடுத்து ‘நாடகமேடை’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த அறிவிப்போடு சரி, இப்படம் குறித்து அதன் பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கார்த்திக் நரேன் அருண் விஜய்யிடம் ஒரு கதை சொல்லியுள்ளார் என்றும் அந்த கதை அருண் விஜய்க்கு பிடித்துள்ளது என்றும் அதில் அருண் விஜய் நடிக்க உள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. அதே நேரம் இந்த படத்திற்காக நடிகை நிவேதா பெத்துராஜிடமும் பேச்சு வார்த்தை நடந்துள்ளது என்றும் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது! இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தடம்’. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளியான இப்படமும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

.

#ArunVijay #KarthikNaren #Thadam #DhuruvangalPathinaaru #ArvindSwamy #ShriyaSaran #Indrajith, #SundeepKishan #Aathmika

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;