விரைவில் நடிகர் சங்க தேர்தல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய  விரைவில் நடக்க இருக்கிறது தேர்தல்!

செய்திகள் 29-Apr-2019 1:47 PM IST Top 10 கருத்துக்கள்

நேற்று முன் தினம் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற் குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் செயல்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைய இருப்பதால் இச்சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தலை நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெள்யிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்த செயற்குழுக் கூட்டத்தில் 2015-18-க்கான நிர்வாகத்தின் பதவிக்காலம் 2019 ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகையால் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க, தேர்தல் நாள், தேர்தல் நடக்கும் இடம், மற்றும் தேர்தல் அதிகாரி தலைமையில் தேர்தல் நடத்துவது, தேர்தல் சம்பந்தமான அறிக்கைகளை உறுப்பினர்களுகு பொதுச்செயலாலர் தெரியப்படுத்துவது பொன்ற அனைத்திற்கும் நிர்வாக குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன், செயற் குழு உறுப்பினர்களான ராஜேஷ், ஸ்ரீமன், ரமணா, உதயா, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, சங்கீதா, விக்னேஷ், டி.பி.கஜேந்திரன், மனோபாலா, அஜய் ரத்தினம், லலிதகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#SouthIndianArtistes'Association #SIAA #NadigarSangam #Nassar #Ponvannan #Vishal #Karthi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;