பேய் படங்களை தொடர்ந்து இப்போது ‘அகோரி’ படம்!

பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் தேவையில்லை – அகோரி பட விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு

செய்திகள் 7-May-2019 7:05 PM IST VRC கருத்துக்கள்

ஆர்.பி.ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.பி.பாலாவும், ‘மோஷன் ஃபிலிம் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் சுரேஷ்.கே மேனனும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அகோரி’. அறிமுக இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ‘மைம்’ கோபி, சாயாஜி ஷிண்டே, சித்து, வெற்றி, கார்த்திக், ஷரத் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பி.பாலா பேசும்போது,

‘‘அகோரி’ என்னுடைய நீண்டநாள் கனவு படம். இது 2012-ல் திட்டமிட்டு, தொடங்க எண்ணியிருந்தேன். ஆனால் சில சூழல் காரணமாக அப்போது பண்ண முடியவில்லை. இந்த படத்தை நாங்கள் கடந்த ஆண்டு நிறைவு செய்திருக்க வெண்டும். ஆனால் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள நிறைய இருப்பதால் அந்த பணிகள் முழுமை அடைய கொஞ்சம் காலதாமதமானது. கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைவாக வரவேண்டும் என்பதற்காகதன் இந்த காலதாமதம்.

‘பார்தியார்’ படத்திற்கு பிறகு சாயாஜி ஷிண்டே இப்படத்தில் டைட்டில் ரோலில் ‘அகோரி’யாக நடித்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் துவங்கிய இப்படம் இப்போது பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’’ என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாக்யராஜ் பேசும்போது, ‘‘இந்த அகோரி டைட்டில் படத்திற்கு பெரிய ப்ளஸ்! சில விஷயங்களை பற்றி எவ்வளவு பேசினாலும் நாம் அதை ரசித்து கேட்டுகொண்டே இருப்போம். அதைப்போலதான் பேய் கதைகளும். நான் இப்படி நினைப்பதுண்டு! பேய் இருப்பது உண்மை என்றால் இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷனே தேவையில்லை! ஒருவரை கொலை செய்துவிட்டால் அவர் பேயாக வந்து பழிக்குப் பழி வாங்கி கொன்று விடலாம். ஆனால் எப்போதும் கொலையாளியை போலீஸ்காரர்கள்தான் தேடிகொண்டிருக்கிறார்கள். அதனால் பேய் இல்லை என்பது உறுதியாகிறது. ஆனால் பேய் என்ற கான்சப்ட் நிறைய பேருக்கு உதவியாக இருக்கிறது.

பேய் போலதான் இப்போது ”அகோரி’யும் என்று நினைக்கிறேன். அகோரி என்றால் நான் நெகட்டிவாகதான் நினைத்திருந்தேன். ஆனால் இப்படத்தில் அகோரியை பாசிட்டிவாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன். அதனால் . இந்த படத்தையும் மக்கள் ரசித்து வெற்றிப் படமாக்குவார்கள் என்பது நிச்சயம்! இந்த படக்குழுவினரின் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்’’ என்றார்!

இவர்கள் தவிர் விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், நடிகர் ‘மைம்’ கோபி ஆகியோரும் படக்குழுவினரை வாழ்த்தி பேசினாரக்ள்!.


#Kasthuri #K.Bhagyaraj #MimeGopi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - நீ இல்லை என்றால்


;