‘மிஸ்டர் லோக்கல்’ - கண்டிஷன் போட்ட சிவகார்த்திகேயன்!

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் டாஸ்மாக், குடித்துவிட்டு நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் இடம்பெறாது!

செய்திகள் 14-May-2019 12:32 PM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தரா இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் இந்த படம் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாகிறது! இதனையொட்டி நடந்த இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் எம்.ராஜேஷ் படம் குறித்து பேசும்போது, ‘‘சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா சாருடன் இந்த படத்தை நான் இயக்குவது முடிவானதும், ‘இந்த படத்தை பெரிய ஹிட் படமாக கொடுத்து விடுங்கள்’ என்றார் ஞானவேல் ராஜா சார்! அதே நேரம், இந்த படத்தில் குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுவது மாதிரியான பாடல் காட்சிகள், பெண்களை திட்டி பாடுகிற பாடல் எதுவும் வேண்டாம் சார்’ என்று எனக்கு அன்பாக கண்டிஷன் போட்டார் சிவகார்த்திகேயன். அதனால் எனது முந்தைய படங்களில் இடம்பெற்றது மாதிரியான டாஸ்மாக் காட்சிகள், குடித்து விட்டு பாடுவது மாதிரியான காட்சிகளை எல்லாம் இப்படத்தில் தவிர்த்திருக்கிறேன். இது ஒரு க்ளீன் எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். இந்த படத்தில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர், தம்பி ராமையா, சதீஷ் என்று பெரிய நடசத்திரப் பட்டாளம் நடிக்க காரணமே சிவகார்த்திகேயன் தான். இவர்களை எல்லாம் ஞானவேல்ராஜா சார் ஒருங்கிணைத்து கொடுத்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு சமமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் நயன்தாரா! அவர் இந்த படத்திற்கு பெரிய பலம்! அதைப் போல ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியின் இசையும் இப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்து பாரக்கக் கூடிய ஒரு படமாக ‘மிஸ்டர் லோக்கல்’ இருக்கும்’’ என்கிறார் இயக்குனர் எம்.ராஜேஷ்!

#sivakarthickeyan #Rajesh.M #Nayanthara #HiphopTamizhAadhi #Studio Green #Mr.local

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;