‘கொலைகாரன்’ புதிய அதிகாரபூர்வ தகவல்!

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணைந்து நடிக்கும் ‘கொலைகாரன்’ படத்திற்கு U/A சர்டிஃபிக்கெட்1

செய்திகள் 14-May-2019 12:43 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனியும், அர்ஜுனும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் ‘கொலைகாரன்’. தியா மூவீஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் தயாரித்துள்ள இந்த படத்தின் விநியோக உரிமையை தனஞ்சயனின் ‘பாஃப்ட்டா’ நிறுவனம் வாங்கியுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை ஜூன் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்று முடிந்துள்ளது. சென்சாரில் ‘கொலைகாரன்’ படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுனுடன் ஆஷிமா நர்வால், நாசர், சீதா, குருசோமசுந்தரம், மயில்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். சைமன் கே. கிங் இசை அமைத்துள்ளார். முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் படம் ‘கொலைகாரன்’.

#VijayAntony #Kolaigaran #AshimaNarwal #AndrewLouis #Arjun

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிப்ஸி ட்ரைலர்


;