முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய்சேதுபதி!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ’லாபம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 14-May-2019 2:15 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் ‘லாபம்’. விஜய் சேதுபதியின் ‘விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸு’ம், ‘7CS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ஆம் தேதி ராஜபாளையத்தில் துவங்கியது. அதனை தொடர்ந்து முழுவீச்சில் விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசனுடன் ஜெகபதி பாபுவும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘லாபம்’ நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக, அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.#VijaySethupathi #JagapathiBabu #ShrutiHaasan #Laabam #SPJananathan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூங்கா - டைட்டில் டீசர்


;