இராணுவ வீரராக விஷால், போலீஸ் அதிகாரியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடிக்கும் படம்!

செய்திகள் 14-May-2019 3:37 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘அயோக்யா’. இந்த படத்தை தொடர்ந்து விஷால் சுந்தர்.சி. இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துடன் ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் விஷால்! மிஷ்கின் இயக்கும் இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு உட்பட்ட படத்தின் ப்ரீ- புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகிறது.

மேற்குறிப்பிட்ட படங்கள் தவிர அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் ஒரு படத்திலும் விஷால் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படம் ‘இரும்புத்திரை’ படம் மாதிரி சைபர் விஷயங்களை மையப்படுத்திய கதை என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படம் குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் விஷால் ‘இரும்புத்திரை’ படத்தில் நடித்தது மாதிரி இராணுவ வீரராக நடிக்கிறாராம். அத்துடன் இந்த படத்திற்காக ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் இந்த படத்திற்கு இரும்புத்திரை படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே இசை அமைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Vishal #YuvanShankarRaja #ShraddhaSrinath

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;