6 மாதத்துக்கு ஒரு படம் தரவிருக்கும் சிவகார்த்திகேயன்!

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேசிய விவரம் வருமாறு…

செய்திகள் 14-May-2019 4:10 PM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் முதலானோர் நடிக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பேசும்போது,

‘‘மிஸ்டர் லோக்கல்’ மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்.எம்.எஸ். படத்திற்காக நான் ஒரு சின்ன கேரக்டருக்கு டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் மூலம் கிடைத்த படம் தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. என் கேரியரில் மிக முக்கியமான படம். இதனை தொடர்ந்து எங்களுக்குள் அடிக்கடி பேச்சு வார்த்தைகள் நடந்தது. எப்படியாவது ராஜேஷ் சார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது.தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, இசை அமைப்பாளர் ஹிப் பாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவாளர்ன் தினேஷ் கிருஷ்ணன், மற்றும் நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் என்று நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாரா உடன் இரண்டாவது படம். ‘ வேலைக்காரன்’ படத்தில் அவருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. ஆனால் இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன்’’ என்றார் சிவகார்த்திகேயன்!

#sivakarthickeyan #Rajesh.M #Nayanthara #HiphopTamizhAadhi #StudioGreen #Mr.local

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;