சூர்யாவின் NGK – பெண் ரசிகைகளுக்காக பிரத்தியேக ஷோ!

சூர்யாவின் NGK – கேரளாவில் சூர்யாவின்  பெண் ரசிகைகளுக்காக பிரத்தியேக காட்சி!

செய்திகள் 15-May-2019 11:24 AM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் ‘NGK’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இப்படம் இம்மாதம் 31 ஆம் தேதி உலகம் உழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாக இருக்கிறது. செல்வராகவனும், சூர்யாவும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சூர்யா நடிக்கும் படங்களுக்கு கேரளாவிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கேரளா மலப்புறம் மாவட்டததிலுள்ள சூர்யாவின் ரசிகர்களும், V1000 லவ்வர்ஸ் லேடீஸ் யூனிட்டும் இணைந்து ‘NGK’ பெண்கள் மட்டும் பார்க்கும் ஒரு ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்த தகவலை ‘சூர்யா ஃபேன்ஸ் கிளப்’ ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்பெஷல் ஷோ மலப்புறம் மாவட்டம் சங்கரங்குளத்தில் உள்ள மார்ஸ் சினிமாஸ் திரையரங்கில் காலை நடைபெற இருக்கிறது. சூர்யா நடிக்கும் படத்திற்கு இதுபோன்று கேரளாவில் பெண்களுக்கு மட்டுமான ஒரு ஸ்பெஷல் ஷோ நடத்தப்படுவது இதுதான் முதல் முறையாம்!


#NGK #Suriya #RakulPreetSingh #SaiPallavi #YuvanShankarRaja #Selvaraghavan #SRPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;