‘மாயா’ பட இயக்குனரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி?

‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘கேம் ஓவர்’ ஜூன் 14-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 15-May-2019 12:37 PM IST Top 10 கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் ‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்த முதல் படம் ‘மாயா’. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தொடர்ந்து அஸ்வின் சரவணன் ‘இரவாக்காலம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா கேபி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் சரவணன் தனது மூன்றாவது படமாக ‘கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் டாப்ஸி கதையின் நாயகியாக நடிக்கிறார். ஷஷிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனமும், ‘ரிலையன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீஸர் சற்றுமுன் வெளியானது. டாப்ஸியை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த டீஸர் மூலம் இப்படமும் ‘மாயா’ மாதிரி ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த டீஸரில் இப்படம் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் ‘இரவாக்காலம்’ படத்திற்கு முன்னதாக ‘கேம் ஓவர்’ படம் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ‘கேம் ஓவர்’ படத்திற்கு ‘மாயா’ படத்திற்கு இசை அமைத்த ரான் ஏதன் யோஹானே இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை வசந்த் கவனித்துள்ளார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் கவனித்து வருகிறார்.

#Maya #GameOver #AshwinSaravanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;