மிஷ்கின், ஆர்.கே.சுரேஷை இயக்கும் ‘டூலெட்’ இயக்குனர்?

‘டூலெட்’ படத்தை தொடர்ந்து செழியன் இயக்கும் படத்தில் மிஷ்கின், ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்கள்!

செய்திகள் 15-May-2019 12:49 PM IST Top 10 கருத்துக்கள்

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘டூலெட்’. சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ஒருவர் குடியிருக்க வீடு தேடும் படலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளியது. அதே நேரம் இப்படத்திற்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்து இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் களம் இறங்கி வெற்றிபெற்ற செழியன் அடுத்து எந்த மாதிரி படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்புதான் இப்போது ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இந்நிலையில் செழியன் அடுத்து த்ரில்லர் ரக கதை ஒன்றை இயக்க உள்ளார் என்றும் இந்த கதையில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கினையும், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷையும் நடிக்க வைத்து இயக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது என்றும் இது முடிவடைந்ததும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

#Tolet #Cheziyan #Mysskin #RKSuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;