‘தனி ஒருவன்-2’ மோகன் ராஜாவின் அப்டேட்!

‘தனி ஒருவன்-2’ குறித்து இயக்குனர் மோகன் ராஜா அளித்துள்ள புதிய தகவல்!

செய்திகள் 15-May-2019 2:23 PM IST VRC கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடித்து 2015-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தனி ஒருவன்’. இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக இயக்குனர் மோகன்ராஜவும், ஜெயம் ரவியும் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார் மோகன் ராஜா. இந்நிலையில் ‘தனி ஒருவன்’ படத்தை மீண்டும் பார்த்த இயக்குனர் ராம், ‘‘ராஜா, மீண்டும் ‘தனி ஒருவன்’ படத்தை பார்த்தேன். மிகப் பெரிய உழைப்பை கொடுத்துள்ளீர்கள், எப்படி இப்படி?’ என்று ட்விட்டர் மூலம் இயக்குனர் மோகன் ராஜாவிடம் கேட்டுள்ளார். அத்துடன், ‘நீங்கள் அடுத்த பாகத்தை மிகவும் கவனமாக எடுங்கள்’ என்றும் ராம் கூறியுள்ளார். இதற்கு மோகன் ராஜா ட்விட்டரில் அளித்த பதிலில், ‘‘தனி ஒருவன்-2’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. எனது உதவி இயக்குனர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா? என்று கேட்டேன். அவர்களும் 200% கண்டிப்பாக என்று கூறியுள்ளார்கள்’’ என்று பதில் அளித்துள்ளார். இதனால் ‘தனி ஒருவன்-2’ படத்தின் வேலைகள் மிகவும் சூடு பிடித்துள்ளது என்பது தெரிய வருகிறது. ‘ஜெயம்’ ரவி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கோமாளி’. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லக்‌ஷமன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ‘ஜெயம்’ ரவி. இந்த படம் முடிந்ததும் ‘தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#MohanRaja #ThaniOruvan2 #JayamRavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் பட காட்சிகள்


;