‘ஆதித்யா வர்மா’வின் முக்கிய தகவல்!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்யா வர்மா’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு  வேலைகளும் முடிவடைந்தது!

செய்திகள் 15-May-2019 3:49 PM IST Top 10 கருத்துக்கள்

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் இயக்கினார் பாலா. விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘வர்மா’ ரிலீஸுக்கு தயாராகி வந்த நிலையில் இந்த படத்தை கைவிடப்படுவதாக இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இதனை தொடர்ந்து ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசாயா இயக்கத்தில் ‘வர்மா’ படத்தை துருவ் விக்ரமை மீண்டும் நடிக்க வைத்து ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது ‘ஆதித்யா வர்மா’வின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துவிட்டது என்பதை இப்படக் குழுவை சேர்ந்த MUKESH RATILAL MEHTA ட்விட்டர் மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

‘ஆதித்யா வர்மா’வில் துருவ் விக்ரமுடன் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். இவர்களுடன் ப்ரியா ஆனந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசை அமைத்த ரதனே இப்படத்திற்கும் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை ரவி.கே.சந்திரன் கவனித்துள்ளார். இந்த படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

#AdithyaVarma #DhruvVikram #BanitaSandhu #PriyaAnand #Gireesaya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா டீஸர்


;