சமூக போராளி ‘பாந்த் சிங்’கை கௌரவித்த ‘ஜிப்ஸி’ படக்குழுவினர்!

ராஜு முருகன் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது!

செய்திகள் 20-May-2019 3:52 PM IST Top 10 கருத்துக்கள்

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, நடாஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை எஸ்.கே.செல்வகுமார் கவனிக்க, படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கவனித்து வருகிறார்.

’ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாஇல் படக்குழுவினர் தவிர்த்து இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி, கரு பழனியப்பன், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபு, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அதிபர் ஆர்.பி.சௌத்ரி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் அனைவரையும் நெகிழ வைக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதாவது, ‘ஜிப்ஸி’ படத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாந்த் சிங் என்பவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர் ஒரு சமூக போரளி! உயர் ஜாதியினரால் தனது மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட, அதற்கு நியாயம் கேட்டு, அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக குரல் கொடுத்தவர்! இதனால் தனது இரண்டு கைகளையும் இழக்க நேர்ந்தவர். இப்படி தனக்காக மட்டும் அல்லாமல் பாதிக்கப்படுகிற மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் ஒரு சமூக போராளி பாந்த் சிங்! இவர் பற்றிய ஒரு புத்தகத்தை தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, அதனை ‘ஜிப்ஸி’ விழாவில் வெளியிடப்பட்டது. சமூக போராளியான பாந்த் சிங்கை ‘ஜிப்ஸி’ படக்குழுவினர் கௌரவித்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘ஜிப்ஸி’ படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளதாம். ‘ஜோக்கர்’ படத்தில் ராஜுமுருகன் சொன்ன புரட்சிகரமான கருத்தைப் போல இப்படமும் புரட்சிகரமாக பல கருத்துக்க்ளை தாங்கி வரும் படம் என்பது இப்படத்தின் டிரைலர் மூலம் தெரிய வருகிறது. ‘ஜிப்ஸி’ மிக விரைவில் ரிலீசாக இருக்கிறது.


#RajuMurugan #Jiiva #Gypsy #OlympiaFilms #Joker

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;