அருண் விஜய், கார்த்திக் நரேன் இணையும் படத்தின் தலைப்பு?

கார்த்திக் நரேன், இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் ‘மாஃபியா’

செய்திகள் 27-May-2019 3:23 PM IST VRC கருத்துக்கள்

‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘நரகாசூரன்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு ‘நாடக மேடை’ படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அருண் விஜய்யை வைத்து கார்த்திக் நரேன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அந்த தகவலை சமீபத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படம் குறித்த மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளது. கார்த்திக் நரேனும் அருண் விஜய்யும் முதன் முதலாக இணையும் இந்த படத்திற்கு ‘மாஃபியா’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள் என்றும் இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, இப்படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜும், வில்லனாக பிரசன்னாவும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படம் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தடம்’ படத்தை தொடர்ந்து அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அருன் விஜய்யுடன் ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.
#ArunVijay #KarthickNaren #NivethaPethuraj #Mafiya #Naragasooran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;