‘பாகுபலி’க்கு அடுத்து மான்ஸ்டர்!

‘மான்ஸ்டர்’ குழுவினருடன் மீண்டும் படம் பண்ண வேண்டும்! -எஸ்.ஜே.சூர்யா!

செய்திகள் 27-May-2019 5:38 PM IST VRC கருத்துக்கள்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் ஆகியோருடன் ஒரு எலியும் முக்கிய கேரக்டரில் இடம்பெற்று சென்ற 17-ஆம் தேதி வெளியான படம் ‘மான்ஸ்டர்’. ‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு பத்திரிகையாளர்கள் தந்த நல்ல விமர்சனங்களும் உறுதுணை புரிந்தது. இதனால் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘மான்ஸ்டர்’ குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா பேசுகையில்,

‘‘மான்ஸ்டர்’ முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரமும் வெற்றியானதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் இந்த காலகட்டத்தில், கதைக்காக படம் பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதைதான் நாயகன். இந்த படத்தை பெரும்பாலான தியேட்டர்களுக்கும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். வெற்றி தியேட்டரில் படம் பார்க்க சென்றிருந்தபோது ஒரு சிறுவன் என்னைப் பார்த்து எலி மாமா என்று கூட கூறினான். அந்த சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன். இது மாதிரி குழந்தைகளை பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.

‘பாகுபலி’க்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று சில தியேட்டர்காரர்கள் சொன்னதை கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் வெற்றி. இந்த படத்தின் மூலம் குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர். இப்படம் மூலம் என்னை உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு இயக்குனர் நெல்சனுக்கும், இந்த படத்தை தயாரித்த ‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தினருக்கும் என்னுடைய நன்றிகள்! இந்த குழுவுடன் மீண்டும் படம் பண்ண வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்றார் எஸ்.ஜே.சூர்யா!

இந்நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், வசனகர்த்தா சங்கர் தாஸ், படத்தொகுப்பாளர் சாபு ஜோசஃப், நடிகர் கருணாகரன், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ஆகியோரும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.

#Monster #SJSuriyah #PriyaBhavaniShankar #JustinPrabhakaran #NelsonVenkatesan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;