சந்தானம் நடிக்கும் ‘டகால்டி’

இயக்குனர் ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் ‘டகால்டி’.

செய்திகள் 6-Jun-2019 1:00 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கும் முதல் படம் ‘டகால்டி. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, வங்காள மொழி நடிகை ரித்திகா சென் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் மூலம் சந்தானத்துடன் ‘யோகி’ பாபு முதன் முதலாக இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, ரேகா, சந்தான பாரதி, மனோபாலா,. நமோ நாராயணா, ‘ஸ்டண்ட்’ சில்வா, பாலிவுட் நடிகர் ஹேமந்த் பாண்டே ஆகியோருடன் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த படத்தில் பின்னணி பாடகர் விஜய் நாராயணன் இசை அமைப்பாளராக பணியாற்ற பாடல்களை கார்கி எழுத, ஒளிப்பதிவை தீபக்குமார்பதி கவனிக்க, டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தை ஜாக்கி கவனிக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர், திருநேல்வேலி, காரைக்குடி, சென்னை, அம்பாசமுத்திரம், புனே மும்பை ஆகிய இடங்களில் படமாகியுள்ளது என்பதையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தானம் ஸ்டலில் ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகும் ‘டகால்டி’ படத்தை ‘18 ரீல்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த டாக்டரும், முன்னணி திரைப்பட விநியோகஸ்தருமான எஸ்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். அத்துடன் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தின் அடுத்த பாகத்தை 3D தொழில் நுட்பத்தில் தயாரிக்கவும் தயரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி சந்தானத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்ற தகவலையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர்


;