100 நிமிடங்களே ஓடும் படம் ‘கேம் ஓவர்’

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் ‘கேம் ஓவர்’

செய்திகள் 7-Jun-2019 2:13 PM IST Top 10 கருத்துக்கள்

‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளியான படம் ‘மாயா’. நயன்தாரா நடித்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அஸ்வின் சரவணன், எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா கேபி ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம் ‘இரவாக்காலம்’. . இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அஸ்வின் சரவணன் தனது மூன்றாவது படமாக இயக்கியுள்ள படம் ‘கேம் ஓவர்’. இந்த படத்தை ‘விக்ரம் வேதா’ உட்பட பல படங்களை தயாரித்துள்ள சசிகாந்தின் ‘ஒய் நாட் ஸ்டூடியோ’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் டாப்ஸி கதையின் நாயகியாக நடிக்க இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளதோடு ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் கூறும்போது,

‘மாயா’ படத்தை தொடர்ந்து நான் இயக்கியுள்ள படம் ‘இரவாக்காலம்’. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் வெளியாகும். அதற்கு முன்னதாக ‘கேம் ஓவர்’ வெளியாக இருக்கிறது. டாட்ஸி கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படம் மாறுபட்ட ஒரு ஜானரில் உருவாகியுள்ளது. 100 நிமிடங்களே ஓடும் இப்படத்தில் பாடல்கள் இல்லை! இடைவேளை இல்லாமல் கூட படத்தை திரையிடலாம் என்ற யோசனை இருந்தது. ஆனால் அது தமிழ் சினிமாவுக்கு செட் ஆகாது என்பதால் அந்த யோசனையை விட்டுவிட்டோம். இப்படி ‘கேம் ஓவரி’ல் பல ஸ்பெஷல்கள் உள்ளன. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக உருவான இப்படம் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படத்தில் டாப்ஸி ‘ஸ்வப்னா’ என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரது கேரக்டரை மையப்படுத்தியே ‘கேம் ஓவர்’ படத்தின் முழு கதையும் நகரும். மாறுபட்ட ஒரு கதைகளத்தில் உருவாகியுள்ள இப்பட்ம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

‘கேம் ஓவர்’ படத்தின் கதையை அஸ்வின் சரவணனுடன் டாக்டர் காவியா ராம்குமார் இணைந்து எழுதியுள்ளார். ‘மாயா’ படத்திற்கு இசை அமைத்த ரான் எதன் யோஹானே இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். இப்படத்தின் ஒளிப்பதிவை வசந்த் செய்துள்ளார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கேம் ஓவர் ட்ரைலர்


;