சசிகுமார் படத்தில் இணைந்த சரத்குமார்!

நிர்மல்குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தில் இணைந்த சரத்குமார்!

செய்திகள் 7-Jun-2019 2:23 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ படத்தை இயக்கியவர் நிர்மல் குமார். இவர் சசிகுமார் நடிக்க, ஒரு படத்தை இயக்குகிறர் என்றும் இந்த படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.கே.ராம்மோகன் தயாரிக்கிறார் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். கடந்த ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்பையில் நடந்து வருகிரது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி, மும்பையில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். மும்பையில் 25 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கும் இப்படம், சசிகுமாரும், சரத்குமாரும் இணைந்து நடிக்கும் முதல் படமாகும். இந்த படத்தின் ஒளிப்பதிவை கணேஷ் சந்திரா கவனித்து வருகிறார். கலை இயக்கத்தை ஆனந்த் மணி மேற்கொள்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நாயகி மற்றும் இசை அமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;