பாண்டவர் அணிக்கு எதிராக களமிறங்கும் பாக்யராஜ் டீம்!

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணிக்காக எதிராக களமிறங்கும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான குழுவினர்!

செய்திகள் 8-Jun-2019 11:27 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வருகிற 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் சங்கத்தில் இப்போது பதவி வகித்து வரும் நாசர், விஷால், கார்த்தி உட்பட்ட பாண்டவர் அணியினர் மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு எதிராக பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான ஒரு புதிய அணியும் போட்டியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் கே.பாக்யராஜ் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஐசரி கணேஷ் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். துணை தலைவர்கள் பதவிகளுக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு பூர்ணிமா பாக்யராஜ், சங்கீதா, ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம், ரஞ்சனி, சிவகாமி, கே.ராஜன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரமேஷ் கண்ணா, ஷ்யாம், பரத், ஸ்ரீகாந்த், விமல், நிதின் சத்யா, அயூப்கான், மருது பாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாண்டவர் அணியை போல் இந்த புதிய் அணிக்கான பெயர் குறித்த விவரம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இப்படி இரண்டு பலமிக்க அணியினர் வருகின்ற நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட இருப்பதால் நடிகர் சங்க தேர்தல் விவகாரங்கள் சூடு பிடித்துள்ளாது. இந்த தேர்தல் வருகின்ற 23-ஆம் தேதி சென்னை சத்யா ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலைக் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. #NadigarSangam #Bhagyaraj #PandavarAni #Sangeetha #AarthiGanesh #GayatriRaghuram #Ranjani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;